March 24, 2023 4:26 pm

காணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தது அமெரிக்க குழுகாணாமல் போனோரின் உறவுகளை சந்தித்தது அமெரிக்க குழு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

அமெரிக்க இராஜாங்க திணைக்கள செயலாளர் நிஸா தெசாய் பிஸ்வால் மற்றும் தூதுவர் சிசென் அடங்கிய குழுவினர் காணாமல் போனோரின் உறவினர்களை கிறீன் கிறாஸ் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த சனிக்கிழமை  பிற்பகல் 1 மணிக்கு இடம்பெற்ற இச் சந்திப்பில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் கலந்துகொண்டார். அதன் போது கருத்து வெளியிட்ட அனந்தி சசிதரன், இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது இப்போது நாங்கள் நடுக்கடலில் விடப்பட்டவர்களாக  இருக்கிறோம் ஒரு சிறு துரும்பு கிடைத்தால் கூட அதோடு கரைசேரலாம் என துடிக்கிறோம் எனஅனந்தி தெரிவித்தார்.

மேலும் ஜெனிவா மாநாட்டில் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல் போனோர் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கடும் அழுத்தத்தினை கொடுப்போம் என பிஸ்வால் தெரிவித்துள்ளதாக அனந்தி ஊடகங்களுக்கு தெரிவித்தார். அதன் பின்னர் வட மாகாண ஆளுநர் ஜி;.ஏ. சந்திரசிறியை அமெரிக்க குழு ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

 

unnamed (1)

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்