கிளிநொச்சியில் பொறியியல், விவசாய பீடங்கள் திறப்பு (படங்கள் இணைப்பு) கிளிநொச்சியில் பொறியியல், விவசாய பீடங்கள் திறப்பு (படங்கள் இணைப்பு)

 

கிளிநொச்சியின் அறிவியல் நகரில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் இரு பீடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பல வருடங்களாக விவசாய பீடம் கிளிநொச்சியில் இயங்கிவந்த போதிலும் கடந்தகால இராணுவ நடவடிக்கையில் முற்றாக சேதமடைந்ததை தொடர்ந்து யாழ் மாவட்ட பிரதேசத்தில் இயங்கி வந்தது. தற்போது புதிய கட்டிடத் தொகுதியில் மீண்டும் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்துக்கு மிகவும் நீண்ட காலமாக கிளிநொச்சியில் காணி ஒதுக்கப்பட்ட நிலையிலும் தற்போதுதான் நிர்மாணிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்வில் உயர்கல்வி அமைச்சர் எஸ் பி திசநாயக்கா, அமைச்சர் டகளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

 

a9

a8

a6

a7

a5

ஆசிரியர்