கிளிநொச்சியில் மேட்டார்சைக்கிளில் வந்தவர் டிப்பரில் மோதுண்டு பலி கிளிநொச்சியில் மேட்டார்சைக்கிளில் வந்தவர் டிப்பரில் மோதுண்டு பலி

இன்று இரவு கிளிநொச்சி பகுதியில் குறிப்பிட்ட சில மணித்தியாலயங்களில்  5 வீதி விபத்துக்கள் இதில் ஒருவர் பலி.

6.30 மணியளவில் கிளிநொச்சி முரசுமோட்டை பகுதியில் வீதியில் சென்று கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது வேகமாக வந்த வான் மோதியுள்ளது இதில் துவிச்சக்கர வண்டியில் வந்தவர் காயமடைந்து கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதே வேளை வவுனியாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த தம்பதியர் கிளிநொச்சி முருகண்டி பகுதியில் நிறுத்திவைத்திருந்த டிப்பர் வாகனத்துடன் மோதுண்டுள்ளனர். இதில் மேட்டார்சைக்கிளில் வந்தவர்களில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிர் இழந்துள்ளார்..

ஆசிரியர்