March 27, 2023 5:59 am

அமெரிக்கா ஆராய்ச்சி | மரங்களில் ஏறும் முதலைகள்அமெரிக்கா ஆராய்ச்சி | மரங்களில் ஏறும் முதலைகள்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

unnamed

அமெரிக்காவின் டென்னிசி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் முதலையின் மரம் ஏறும் திறன் பற்றி ஆராய்ச்சியை மேற்கொண்டனர். இக்கல்லுரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் விளாடிமிர் டைனட்ஸ் தனது சக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் வடஅமெரிக்கா பகுதியில் உள்ள முதலைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவில் பல தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. முதலைகள் வழக்கமாக நீரில் தான் இருக்கும். ஆனால் அதன் அளவினை பொறுத்து மரத்தில் ஏறும் திறன் மாறுபடும், அளவில் சிறிய முதலைகள் பெரிய முதலைகளை விட மரத்தில் எளிதாக ஏறிவிடுகின்றன. ஒருசில முதலைகள் 4 மீட்டர் உயரம் வரை ஏறிவிடுகின்றன. முதலைகள் தரையில் நடப்பது போல் செங்குத்தாக மரத்தில் ஏறுகின்றன.

மரத்திலிருந்து 10 மீட்டர் தூரம் தாவி நீரில் குதிக்கின்றன. வெப்பநிலை மற்றும் வாழ்வியல் காரணிகள் இத்திறனை தீர்மானிக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் மரம் ஏறுவது, முதலையின் எச்சரிக்கைத் திறன், அச்சுறுத்தல் மற்றும் இரையை கண்காணிக்கும் தன்மையை மேம்படுத்த வழிவகுக்கிறது என்றும் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்