இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்இந்திய மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி | உரிமம் இல்லாமல் செயல்படும் 20,000 மருத்துவர்கள்

 

மகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமத்தை பதிவு செய்யாமலும், புதுப்பிக்காமலும், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவர்களாக பணியாற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில், மருத்துவராக பணியாற்றுவதற்கான உரிமம் இல்லாமல் மருத்துவம் செய்வது கிரிமினல் குற்றமாகும்.

இந்த நிலையில், சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தங்களது உரிமத்தை புதுப்பிக்காமலேயே பணியாற்றி வருகின்றனர். மகாராஷ்டிரா மருத்துவக் கழகத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மருத்துவர்கள் தங்களது உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், பலரும் அதனை செய்ய தவறி விடுகின்றனர். இது சட்டப்படி குற்றமாகும் என்று மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

ஆசிரியர்