கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடனான விசேட கலந்துரையாடல்

 

நேற்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் இரனைமடு நீர் திட்டம் தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்

இந்த சந்திப்பானது இன்று யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம் பெறவிருக்கும் வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளும் நோக்கில் கிளிநொச்சிக்கு வருகை தந்த இரா. சம்பந்தன் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுடன் கிளிநொச்சி மாவட்ட அறிவகத்தில் மாலை 4.00மணிக்கு சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதில் சம்மந்தன் கருத்து தெரிவிக்கையில்;

இரனைமடு நீர்த்திட்டமானது கிளிநொச்சி விவசாயிகளின் 100வீத நீர் உரிமைகள் பூர்த்தி செயப்படாமல் யாழ்ப்பானம் கொண்டு செல்ல முடியாது எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

உண்மையில் யாழ் மக்களுக்கு நீர் வழங்க வேண்டியது அவசியம் இதை யாராலும் மறுக்க முடியாது ஆனாலும் கிளிநொச்சி மாவட்டம் ஒர் விவசாய பகுதி எனவே கிளிநொச்சி மக்களின் நீர்உரிமையை பூர்த்தி செய்வேண்டியது அவசியம் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த சந்திப்பில் மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி விமல் | வணக்கம் லண்டன் க்காக 

ஆசிரியர்