April 1, 2023 7:02 pm

ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்ஈழத்தின் மூத்த கலைஞர் கே.எஸ். பாலச்சந்திரன் காலமானார்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

 

ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவரான கே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார். தனிநடிப்பு, மேடை, வானொலி, திரைப்படம், தொலைக்காட்சி, எழுத்து என பல துறைகளில் கால்பதித்தவர். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாக் கொண்ட கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள். ஈழத்தில் பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த புளுகர் பொன்னையா, தணியாத தாகம், கிராமத்துக் கனவுகள், கோமாளிகள் கும்மாளம் ஆகியவை பிரபலமான நாடகங்களாகும்.

தனிநபர் நகைச்சுவை என்ற வகையில் இவர் அறிமுகப் படுத்திய அண்ணை ரைற்றை அறியாதவர்கள் ஈழத்தில் இருந்திருக்க முடியாது. கனடாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் பல நாடகங்களில் நடித்தது மட்டுமன்றி பல நாடகங்களை எழுதி இயக்கியும் வந்துள்ளார். பாலச்சந்திரன் தாய்வீடு பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தவர். இன்று (26/02/2014) மாலை காலமான அவர் இன்று மதியமளவிலும் தனது ஆக்கம் பற்றி தாய்வீடு ஆசிரியருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், கலை உலகினர், ஈழத்து கலை ஆர்வலர்களுடன் தாய்வீடு பத்திரிகை மற்றும் வணக்கம் இலண்டன் இணையம் இந்தத் துயரில் பங்குகொள்கிறது.

 தாய்வீடு பத்திரிகை | கனடா 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்