இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம் இலண்டனில் நேற்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென கோரி பாரிய ஆர்ப்பாட்டம்

இலங்கை போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமெனவும், யாழ் விஜயம் செய்த பிரதமர் கமரூனின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் எனவும், இலங்கை தமிழர்களின் சட்டவிரோதமான நில அபகரிப்பை நிறுத்தக்கோரியும் நேற்று மாலை இலண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரித்தானிய பிரதமர் இல்லத்துக்கு முன் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்துகொண்டனர். இந்தியாவில் நடைபெற்று வரும் தொடர் ஆர்ப்பாடங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையிலும் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் மாநாட்டில் போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை ஏற்படுத்தவேண்டுமென்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

aa2

aa3

aa4

ஆசிரியர்