கே.எஸ்.பாலச்சந்திரன் : மரணம் கலைஞனுக்கு இல்லை | மனவெளி கலையாற்றுக்குழுகே.எஸ்.பாலச்சந்திரன் : மரணம் கலைஞனுக்கு இல்லை | மனவெளி கலையாற்றுக்குழு

sass
உலகறிந்த கலைஞரும், நாடகம், சினிமா, விமர்சனம், எழுத்திலக்கியம் எனப் பல துறைகளிலும் ஆளுமை கொண்டவரும், கனடா கலை இலக்கிய உலகில் எல்லோராலும் நேசிக்கப்பட்டவரும் ,மதிக்கப்பட்டவருமாகிய கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களது இழப்பு மிகுந்த துயரமளிக்கிறது . அக்கறையுள்ள பார்வையாளனாக, விமர்சகராக, அறிவிப்பாளராக, நடிகராக, நெறியாளராக மனவெளி கலையாற்றுக் குழுவிற்கும், பாலா அண்ணாவிற்கும் இருந்த உறவு வலிமையானது, பெறுமதிமிக்கது. அவரை இழந்து தவிக்கும் உறவினர்கள், நண்பர்களின் துயரத்தோடு மனவெளியும் பங்கு கொள்கிறது.

கடந்த அரங்காடலில் கலை என்னும் நதியில் நடந்த நாட்களை நினைவு கூர்ந்து அவர் ஆற்றிய உரை இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது.

 

 

மனவெளி கலையாற்றுக்குழு | கனடா 

 

ஆசிரியர்