இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நடவடிக்கைபற்றி ஜனாதிபதி கருத்து இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நடவடிக்கைபற்றி ஜனாதிபதி கருத்து

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் செயல் உலகப் பொக்ஸின் சம்பியன் அலியுடன் பாடசாலை மாணவன் மோதுவது போல உள்ளது.

இலங்கை தொடர்பில் வொஷிங்டன் ஏன் ஒரு விசாரணையை வலியுறுத்தியுள்ளது என்பதையிட்டு தனக்கு எதுவும் விளங்கவில்லை என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவின் இச்செயல் கஸியஸ் கிளே என்று அறியப்பட்ட உலகப் பிரசித்த குத்துச்சண்டை சம்பியன் முஹம்மட் அலியுடன் பாடசாலை மாணவனொருவன் மோதுவது போல உள்ளது’ என ஜனாதிபதி கூறினார்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் காரணமாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஐக்கிய இராச்சியமும் கனடாவும் ஆதரிக்கின்றன. சீனாயும் ரஷ்யாவும் சில சமயம் இந்தியாவும் இலங்கைக்கு ஆதரவு வழங்குமென ஜனாதிபதி கூறினார். அத்துடன் அவர்களிடம் சான்று இருப்பின் அவர்கள் அதை எம்மிடம் தந்திருக்க வேண்டும்’ எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளிநாட்டு ஊடகங்களை சந்தித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். ஐ.நா மனித உரிமையின் ஆணையாளரின் அறிக்கை எதேச்சாதிகரமானது தேவையில்லாத தலையீடு அரசியல் நோக்கம் கொண்டது என கண்டித்த இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கையை நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்