Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்| புஷ்வானம் ஆகுமா கூட்டத்தொடர் சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்| புஷ்வானம் ஆகுமா கூட்டத்தொடர்

சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்| புஷ்வானம் ஆகுமா கூட்டத்தொடர் சர்­வ­தேச விசா­ரணை இல்­லாத பிரே­ர­ணையே ஜெனி­வாவில்| புஷ்வானம் ஆகுமா கூட்டத்தொடர்

3 minutes read

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இம்­முறை இலங்­கை­க்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் சர்­வ­தேச விசா­ரணை என்ற பதம் உள்­ள­டங்­காது என்றும் சுயா­தீன விசா­ரணை என்ற விடயம் மட்­டுமே இடம்­பெறும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்றது.
இலங்­கைக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயா­தீன விசா­ர­ணையை கோருவோம் என்று பிரிட்டன் அமைச்சர் பரனேஸ் வர்சி தெரி­வித்­தி­ருந்த கருத்தும் சர்­வ­தேச விசா­ரணை கோரப்­ப­ட­மாட்­டாது என்ற விட­யத்தை உறு­தி­ப்ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­துள்­ளது.
அத்­துடன் சர்­வ­தேச அரங்கில் முக்­கிய நாடு­க­ளாக கரு­தப்­படும் சீனாவும் ரஷ்­யாவும் இலங்­கை­ககு எதி­ரான தீர்­மா­னத்தை எதிர்ப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்­த­துடன் இல­ங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவு வழங்­கு­வ­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்­தன.
இதே­வேளை இலங்கை அர­சாங்­கமும் யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­கா­சத்தை மனித உரிமைப் பேரவைக் கூட்டத் தொடரில் கோர­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. யுத்­தத்­துக்குப் பின்­ன­ரான இலங்­கையில் அர­சாங்கம் பாரி­ய­ளவு முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­வ­ரு­வ­தா­கவும் மேலும் முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்த கால அவ­காசம் தேவை என்றும் இலங்கை அர­சாங்க தரப்பில் கோரப்­ப­ட­வுள்­ளது. ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம் பிள்ளை தலை­மையில் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.
உலக நாடு­களின் மனித உரிமை நிலை­மைகள் குறித்த இந்தக் கூட்டத் தொடரில் ஆரா­யப்­ப­ட­வுள்­ள­துடன் பல்­வேறு நாடுகள் தொடர்பில் பிரே­ர­ணை­களும் முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளன. ஆரம்ப அமர்வில் ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை உள்­ளிட்டோர் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
அந்­த­வ­கையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை விவ­காரம் தொடர்பில் ஜெனி­வாவில் மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீதம்பிள்ளை உரை­யாற்­ற­வுள்­ள­துடன் விசேட அறிக்கை ஒன்­றையும் சமர்ப்­பிக்­க­வுள்ளார்.
அந்­த­வ­கையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா சமர்ப்­பிக்­க­வுள்ள பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு இடம்­பெறும் என்று எதிர்­பார்­கக்ப்­ப­டு­கின்­றது.
அமெ­ரிக்கா, பிரிட்டன் , கனடா, பிரான்ஸ், ஜப்பான், நோர்வே ஆகிய நாடு­களின் பிர­தி­நி­தி­களும் ரஷ்­யாவின் வெளி­வி­வ­கார அமைச்சர் சேர்ஜி வி. லவ்ரவ், பிரான்ஸ் வெளி­வி­வ­கார அமைச்சர் டோரன்ட் பேபியஸ், அமெ­ரிக்­காவின் அமைச்­ச­ரவை உறுப்­பினர் சமந்தா பவர், பிரிட்­டனின் இரா­ஜாங்க மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லக அமைச்சர் ஹியுகோ ஸ்வயர், கன­டாவின் வெளி­வி­வ­கார இரா­ஜாங்க அமைச்சர் லின்னி யெலிச் உள்­ளிட்டோர் முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
அமைப்­புக்­களை பொறுத்­த­வ­ரையில் பொது­ந­ல­வாய அமைப்பின் செய­லாளர் நாயகம் கமலேஷ் சர்­மாவும் அனைத்து பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் செய­லாளர் அன்டர்ஸ் ஜோன்­ஸனும் முதல் மூன்று நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்­ளனர்.
இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மார்ச் மாதம் ஐந்தாம் திகதி வெளி­வி­வ­கார அமைச்சர் பேரா­சி­ரியர் ஜீ.எல். பீரிஸ் உரை­யாற்­ற­வுள்ளார்.
இம்­முறை கூட்டத் தொடரில் இல­ங் கைக்கு எதி­ராக மூன்­றா­வது தட­வை­யா­கவும் பிரே­ரணை ஒன்று முன்­வைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்தப் பிரே­ர­ணைக்கு பிரிட்­டனும் அனு­ச­ரணை வழங்­க­வுள்­ளது. பிரே­ர­ணைக்கு உறுப்பு நாடு­களின் ஆத­ரவை பெறும் நோக்கில் பிரிட்­டனும் அமெ­ரிக்­காவும் பாரிய இரா­ஜ­தந்­திர முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளன. அதே­வேளை மறு­புறம் இலங்­கையும் உறுப்பு நாடு­க­ளிடம் ஆத­ரவு கோரி படை­யெ­டுத்­துள்­ளது.
வெளி­வி­வ­கார அமைச்சர் பீரிஸ் அண்­மையில் சீனா­வுக்கும் இந்­தி­யா­வுக்கும் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யங்­களை மேற்­கொண்­டி­ருந்­த­துடன் இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்ள பிரே­ர­ணையை தோற்­க­டிக்க ஆத­ரவு வழங்­கு­மாறு கோரி­யி­ருந்தார்.
எனினும் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்­கு­வது தொடர்பில் இந்­தியா எவ்­வி­த­மான உத்­த­ர­வா­தத்­தையும் வழங்­காத நிலையில் சீனா இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளது. அத்­துடன் ரஷ்­யாவின் உயர்­மட்ட தூதுக்­கு­ழு­வொன்று அண்­மையில் இலங்­கை­ககு விஜயம் மேற்­கொண்­டி­ருந்­த­துடன் சர்­வ­தேச அரங்கில் இலங்­கைக்கு முழு­மை­யான ஆத­ரவை வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்­தது.
இந்­தி­யா­வா­னது கடந்த 2012 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்க விட­ய­மாகும் அது­மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் பல்­வேறு அமைச்­சர்­களும் மனித உரிமைப் பேர­வையின் பல்­வேறு உறுப்பு நாடு­க­ளுக்கும் விஜயம் செய்­த­துடன் ஆத­ரவு கோரும் பட­லத்­தையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.
இதே­வேளை அமெ­ரிக்­காவும் பிரிட்­டனும் மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் ஆத­ரவைப் பெறும் பாரிய இரா­ஜத்­தந்­திர முயற்­சியில் ஈடு­பட்­டுள்­ளன.
இது தொடர்பில் கருத்து வெளி­யிட்­டி­ருந்த பிரி­ட­டனின் இரா­ஜாங்கஇ சமூக திணைக்­களம், உள்­ளூ­ராட்சி மற்றும் வெளி­வி­வ­காரஇ பொது­ந­ல­வாய அலு­வலகம் ஆகி­ய­வற்­றுக்­கான சிரேஷ்ட அமைச்சர் பரனெஸ் வர்சி பிரே­ர­ணைக்கு ஆத­ரவு வெளி­யிட்­டுள்ள உறுப்பு நாடு­க­ளுடன் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­தி­வ­ரு­கின்றோம். பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வது தொடர்பில் மிகவும் கடின உழைப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்றோம் என்று தெரி­வித்­துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More