மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்மீண்டும் முதலிடத்தில் பில்கேட்ஸ்

உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்காவின் போர்ப்ஸ் சஞ்சிகை வருடந்தொறும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. இதன்படி இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் அமெரிக்காவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் மீண்டும் முதலிடம் பெற்றுள்ளார்.
கடந்த சில வருடங்களாக இவர் இந்த பட்டியலில் பின்தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பில்கேட்ஸின் தற்போதைய சொத்துமதிப்பு 76 பில்லியன் டொலர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் பட்டியலில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்பட 56 இந்தியக் கோடீஸ்வரர்கள் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் முகநூல் நிறுவனர் மார்க் சூசர்பெர்க் இந்த வருடம் அதிக லாபம் ஈட்டியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவரது வருமானம் இந்த ஆண்டு மாத்திரம் 15.2 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து 28.5 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

untitled1

ஆசிரியர்