அப்பாவிடம் அனுமதி வாங்கிய பிறகு லிப் கிஸ் கொடுத்த நடிகைஅப்பாவிடம் அனுமதி வாங்கிய பிறகு லிப் கிஸ் கொடுத்த நடிகை

அப்பாவிடம் அனுமதி வாங்கிய பிறகே உதட்டு முத்தக்காட்சியில் நடிப்பதாக பாலிவுட் நடிகை அலியா பட் அதிரடி பேட்டியளித்துள்ளார்.

நடிகை அலியாபட் பிரபல பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மகேஷ் பட் அவர்களின் மகள் ஆவார்.அலியாபட் சமீபத்தில் நடித்து வெளியான ‘ஹைவே’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது 2 ஸ்டேட்டஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் நாயகன் அர்ஜூன் கபூருடன் உதட்டுடன் உதடு வைத்து முத்தம் கொடுப்பதாக ஒரு காட்சி உள்ளது என இயக்குனர் அபிஷேக் வர்மன் கூறியபோது, அலியாபட், அந்த முத்தக்காட்சியில் மறுநாள் நடிப்பதாக சென்றார்.

மறுநாள் அர்ஜூன்கபூருடன் அலியாபட் நடித்த முத்தக்காட்சி படமாக்கப்பட்டது. உதட்டு முத்தக்காட்சியில் நடிக்கும் முன் தனது அப்பாவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் சம்மதித்த பிறகே இந்த காட்சியில் நடித்ததாகவும், அலியா பட் கூறினார். எனது தந்தையின் படங்களில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இருக்கின்றது என்றும், கதைக்கு தேவையானால் முத்தக்காட்சியில் நடிப்பது தவறில்லை என தந்தை கூறியதால் நடித்தேன் என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.

தந்தையிடம் அனுமதி வாங்கிய பிறகு முத்தக்காட்சியில் நடித்தவர் இவர் ஒருவராகத்தான் இருக்கக்கூடும் என பாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.

arj-ali-1

ஆசிரியர்