சீனர்கள், மூச்சுவிடும் காற்றையும் விலைக்கு வாங்குகின்றனர்.சீனர்கள், மூச்சுவிடும் காற்றையும் விலைக்கு வாங்குகின்றனர்.

20 வருடங்களுக்கு பாட்டில் தண்ணீர் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாமல் இருந்தது. ஆனால் இன்று பாட்டில் அல்லது கேன் தண்ணீரைத்தான் நம்மில் 90% பேர் குடிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். தண்ணீரை போலவே மூச்சு விடுவதற்கு காற்றையும் நாம் வெகு சீக்கிரம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வெகுவிரைவில் வர உள்ளது.

தற்போது உலகின் மிக மோசமான காற்று மாசுபடும் நாடாக விளங்கும் சீனாவில் பாட்டிலில், கேரி பேக்கில் காற்று விற்கப்படுகிறது. 80% பச்சைப்பசேல் என்று இருக்கும் இடத்தில் இருந்து தூய்மையான காற்றை பாக்கெட்டில் எடுத்து வந்து அதை மாசு அதிகமுள்ள பகுதியில் விற்பனை செய்துவரும் ஒரு தொழில் சீனாவில் மிக வேகமாக பரவி வருகிறது.

விமானப்பணிப்பெண்களை போல உடையணிந்த இளம்பெண்கள் கையில் தலையணை போன்ற காற்று நிரப்பப்படும் ஒரு பை இருக்கும் அதில் இருந்து நாம் நமக்கு தேவைப்படும் அளவுக்கு தூய்மையான காற்றை சுவாசித்துக்கொள்ளலாம். இதற்குரிய கட்டணம் நம்மிடம் இருந்து வசூல் செய்யப்படும். Laojun Mountains in Luanchuan county என்ற இடத்தில் இருந்து தூய்மையான காற்றை எடுத்து வந்து நகரத்தில் விற்கின்றனர்.

இந்த காற்றை பாட்டிலிலும் அடைத்து வைத்துள்ளனர். நாம் வாங்கிச்சென்று வீட்டிற்கு போயும் சுவாசித்துக்கொள்ளலாம். இந்த காற்று விற்பனை சீனாவில் தற்போது 74 நகரங்களில் அறிமுகமாகியுள்ளது. மாலை நேரத்தில் நல்ல தூய்மையான காற்றை சுவாசிக்க வரிசையில் நிற்கின்றனர் சீனர்கள். இந்த நிலைமை உலகின் பல நாடுகளுக்கும் விரைவில் பரவ உள்ளது. நல்ல சுத்தமான தண்ணீரை விலைக்கு வாங்குவது போன்று இனி நல்ல சுத்தமான காற்றையும் விலைக்கு வாங்கித்தான் சுவாசிக்க வேண்டும்.

0

ஆசிரியர்