ஐ.தே.க வின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளார்ஐ.தே.க வின் முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் வெள்ளை வேனில் கடத்தப்பட்டுள்ளார்

unp-logo-011ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி நபர் திஸ்ஸமகாராம பகுதியில் வேன் ஒன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

திஸ்ஸமகாராம மகசேன்புர பிரதேச வீடொன்றில் இருந்த போது குறித்த நபர் நேற்று நள்ளிரவு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

மருதானை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றில் வேலை செய்யும் நபரே கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்ற போதும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளராகிய திஸ்ஸமகாராம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரே கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

783243047sp3

ஆசிரியர்