கடன் தொல்லைக்காக பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த தாய்கடன் தொல்லைக்காக பிரபல அரசியல்வாதிக்கு 12 வயது மகளை விற்பனை செய்த தாய்

கம்போடியா நாட்டில் அரசியல்வாதி ஒருவருக்கு தனது 12 வயது மகளை கடன் தொல்லைகளுக்காக பெற்ற தாயே விற்பனை செய்த சம்பவம் அந்நாட்டையே குலுங்க வைத்துள்ளது.

Dara Keo, என்ற 12 வயது சிறுமியை அவருடைய தாயார் Rotana என்பவர், 62 வயது பிரபல அரசியல்வாதி ஒருவருக்கு ஒரு மில்லியன் டாலர் பணத்திற்கு விற்றுவிட்டார். சிறுமியை வாங்குவதற்கு முன் அந்த அரசியல்வாதி, சிறுமியின் கன்னித்தன்மையை சோதனை செய்தார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து Rotana கூறியதாவது, ” என்னுடைய கணவர் சூதாட்ட பழக்கம் உடையவர் என்பதால் எங்களுக்கு அதிகமாக கடன் வந்துவிட்டது. கடன்காரர்கள் மிரட்டியதால், கடனை தீர்க்கவே எனது மகளை விற்க சம்மதித்தேன் என்று கூறுகிறார். .

சிறுமியை விலைக்கு வாங்கிய அந்த பிரபல அரசியல்வாதி அந்த சிறுமியை அழைத்துக்கொண்டு ஒரு லாட்ஜில் தங்கவைத்து ஒருவாரம் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அதுமட்டுமின்றி அவருடைய நண்பர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள் என்றும் கூறப்படுகிறது. தற்போது
Dara Keo, என்ற அந்த சிறுமி, நடக்க முடியாமலும், சிறுநீர் கூட கழிக்க முடியாமல் இருப்பதாகவும், அவருக்கு சிகிச்சை செய்து வரும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், அந்த பிரபல அரசியல்வாதியை கைது செய்ய தீவிர முயற்சி செய்து வருகின்றனர். சிறுமியை பணத்திற்காக விற்பனை செய்த தாயாரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்