நயிரோபியில் குண்டு வெடிப்பில் பலர் பலிநயிரோபியில் குண்டு வெடிப்பில் பலர் பலி

கென்யத் தலைநகர் நைரோபியில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பங்களில் 6 க்கும் அதிகமானவர்கள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நைரோபியின் ஈஸ்ட்லேய் சுபாப் பகுதியில் இடம்பெற்ற இரண்டு வெடிப்புச் சம்பங்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஈஸ்ட்லேய் பிரதேசம் சிறிய மொகடிசு என்று வர்ணிக்கப்படுவதுடன், அங்கு பெருவாரியாக சோமாலிய குடிமக்கள் வாழ்கின்றனர்.

பொதுமக்கள் நேற்று மாலை வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்த தருணத்தில் பேருந்து நிலையம் மற்றும் உணவகம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வெடிபொருள் தாக்குதலின் போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக கென்ய அரச நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்களுக்காக சக்திவாய்ந்த கைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கென்ய காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

706x410q70Nairobi-attacks_Simon-Allison_mt

1379807599430.cached

ஆசிரியர்