முதன்முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு $48 மில்லியன் பரிசு.முதன்முறையாக லாட்டரி சீட்டு வாங்கிய பெண்ணுக்கு $48 மில்லியன் பரிசு.

முதன்முதலாக லாட்டரி டிக்கெட் வாங்கிய டொரண்டோ பெண் ஒருவருக்கு $48 மில்லியன் பரிசு கிடைத்துள்ளது. இதனால் அந்த பெண் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி இருக்கிறார்.

கனடாவின் ஒட்டாவா பகுதியில் பணிபுரியும் 42 வயது பெண் Tina Ferrone, மதிய உணவு இடைவெளி நேரத்தில் நேற்று முன் தினம் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். அவர் இதுவரை லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமே இல்லாதவர். அன்றுதான் முதன்முதலாக வாங்கியுள்ளார். அதன்பின்னர் லாட்டரி டிக்கெட் வாங்கியதையே மறந்துவிட்டார். நேற்று ரேடியோவில் ஒட்டாவா நகரில் விற்பனையான லாட்டரி சீட்டுக்கு முதல் பரிசு கிடைத்துள்ளதாக செய்தியறிந்த வுiயெ குநசசழநெஇ தனது லாட்டரி ரிசல்ட்டை சோதனை செய்து பார்த்தபோது தனக்குத்தான் முதல் பரிசு கிடைத்துள்ளது என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

முதலில் அவர் $48,000 பரிசுத்தொகை என்றுதான் எண்ணியுள்ளார். ஆனால் அவருக்கு நேற்று பரிசுத்தொகைக்கான செக்கில் $48 மில்லியன் என்று இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மீண்டும் மீண்டும் அந்த செக்கில் இருந்த சைபரை எண்ணி சரிபார்த்து கொண்டாராம்.

மூன்று குழந்தைகளின் தாயான Tina Ferrone, தனது குழந்தைகளை மிகப்பெரிய அளவில் கல்வியில் சாதனையாளர்களாக மாற்ற இந்த பணத்தை செலவிடுவேன் என்று கூறியுள்ளார்.

olg-48m-winners-tina-ferrone-kanata

ஆசிரியர்