இலங்கையிடம் பான் கீ மூன், சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளார். இலங்கையிடம் பான் கீ மூன், சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.

ஜெனீவாவில் தீர்மானிக்கப்பட்ட இலங்கை மீதான சர்வதேச விசாரணைகளுக்கு நல்லிணக்கத்தின் பொருட்டு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கையிடம் ஐநா செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் விசாரணை குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க போவதில்லை என இலங்கை அரசாங்கம் கூறியுள்ள நிலையில், பான் கீ மூன் சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கையிடம் கூறியுள்ளார். மேலும் சர்வதேச விசாரணைகளின் பின்னர் இலங்கை பொறுப்புக்கூற வேண்டிவரும் என்றும் அவர் கூறியதாக ஐநாவின் “இன்னர் சிட்டி பிரஸ்” செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இலங்கைக்கு எதிரான விசாரணைகளை இலங்கை எதிர்கொள்ள வேண்டியது அவசியம் எனவும், தற்போதைய சூழலில் இலங்கை சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

UN-Generalsekretär Ban besucht Sri Lanka

ஆசிரியர்