பிரிட்டனை நோக்கி வரும் பயங்கர புழுதிப்புயல், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை.பிரிட்டனை நோக்கி வரும் பயங்கர புழுதிப்புயல், வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை.

பிரிட்டனை நோக்கி பயங்கர புழுதிப்புயல் ஒன்று மிக வேகமாக வந்துகொண்டிருப்பதால் வீட்டைவிட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என பிரிட்டன் அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

South Coast, West Country, Midlands and South Wales ஆகிய இடங்கள் இந்த புழுதிப்புயலால் பயங்கரமாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் அந்த பகுதியில் இருக்கும் குழந்தைகளும், முதியவர்களும் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆஸ்துமா நோயாளிகள் தேவையான முன்னெச்சரிக்கையை உடனடியாக செய்துகொள்ளும்படியும் அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இந்த புழுதிப்புயலால் அட்லாண்டிக் பெருங்கடலில் வாழும் மீன்கள் பெரும்பயன் அடையுமாம். அதுபோல பிரேசில் நாட்டில் விவசாயம் செழிப்பாகவும் இந்த புயல் உதவும் என அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

பிரிட்டனின் The medical director for Public Health தலைவர் Dr Paul Cosford என்று காலை பிபிசி ரேடியோவில் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையில்: “நாடு இதுபோன்ற மிகச்சிக்கலான புழுதிப்புயலை சந்தித்தது இல்லை என்றும், இதனால் பொதுமக்களுக்கு அதிக அளவில் உடலளவில் பாதிப்பு ஏற்படும் என்பதால், மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

The Saharan sand என்று அழைக்கப்படும் இந்த புழுதிப்புயலை சமாளிக்க பிரிட்டன் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

strm

article-2593311-1CB848C300000578-656_634x474

ஆசிரியர்