இயேசு கிறிஸ்துவினால் இறுதி இராபோசனத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கிண்ணம் கண்டுபிடிப்புஇயேசு கிறிஸ்துவினால் இறுதி இராபோசனத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கிண்ணம் கண்டுபிடிப்பு

article-2593336-1CB652EC00000578-327_634x856

இயேசு கிறிஸ்துவின் இறுதி இராபோசனத்தின் போது அவர் அருந்துவதற்கு பயன்படுத்தப்பட்ட அலங்கார கிண்ணம் ஸ்பெயினிலுள்ள சிறிய அருங்காட்சியகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வரலாற்று அறிஞர்கள் இருவர் தெரிவிக்கின்றனர்.

வட ஸ்பெயினில் லியோன் நகரிலுள்ள சான் இஸிடோரோ தேவாலயத்தில் தூசு படிந்த நிலையில் மேற்படி கிண்ணம் 1000 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 1950 களில் மேற்படி தேவாலயத்தில் அருங்காட்சியம் திறந்து வைக்கப்பட்ட போது அந்தக் கிண்ணம் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்நிலையில் அந்தக் கிண்ணம் இயேசு கிறிஸ்துவால் பயன்படுத்தப்பட்டமைக்கு சான்றுள்ளதாக வரலாற்று அறிஞர்களான மார்கரிதா ரொரஸூம் ஜோஸ் ஒர்ரிஸா டெல் றியோவும் தெரிவித்தனர்.

இந்த கிண்ணம் கிறிஸ்துவுக்கு முன் சுமார் 200 ஆம் ஆண்டளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தமது ஆய்வின் பிரகாரம் இயேசு கிறிஸ்துவால் இறுதி இராபோசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட கிண்ணம் ஜெருசலேமிலிருந்து களவாடப்பட்டு எகிப்திய கிறிஸ்தவ சமூகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்த ஆய்வாளர்கள் பல நூற்றாண்டுகள் கழித்து சுமார் 1050 ஆம் நூற்றாண்டளவில் அந்தக் கிண்ணம் முதலாம் பெர்னாண்டோ மன்னருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

அதன் பின் அந்தக் கிண்ணம் 1037 ஆம் ஆண்டிலிருந்து 1063 ஆம் ஆண்டு காலத்தில் முதலாம் பெர்னாண்டோ மன்னரின் மகளான யுக்ரேகா மகாராணியாரின் உடைமையாக இருந்துள்ளது. மகாராணியார் அதனை சான் கிஸிடோரோ தேவாலயத்திற்கு வழங்கியுள்ளதாக தமது ஆவண ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The-Last-Supper

ஆசிரியர்