பூட்டியிருந்த வீட்டிற்குள் 3 வாரங்களாக அனாதையாக கிடந்த தாய், மகள் பிணம்பூட்டியிருந்த வீட்டிற்குள் 3 வாரங்களாக அனாதையாக கிடந்த தாய், மகள் பிணம்

இங்கிலாந்து நாட்டின் South wales அருகேயுள்ள Troedyrhiw என்ற நகரில் மூன்று வாரங்களுக்கு முன்னர் மரணம் அடைந்த தாய் மற்றும் குழந்தையின் பிணத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அவர்கள் எவ்வாறு மரணம் அடைந்திருப்பார்கள் என விசாரணை நடந்து வருகிறது.

Joanne Thomas என்ற 27 வயது பெண், தன்னுடைய நான்கு மாத குழந்தையுடன் Troedyrhiw நகரில் உள்ள தனது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவரது வீடு தொடர்ச்சியாக சில வாரங்கள் பூட்டியிருந்ததாகவும், அவரது வீட்டில் இருந்து துர்வாடை வீசுவதாகவும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அவரது வீட்டை சோதனையிட்டனர். அப்போது Joanne Thomas அவர்களும், அவருடைய நான்கு மாத குழந்தையும் படுக்கையில் பிணமாக இருந்ததை கண்டுபிடித்தனர்.

தாயும் குழந்தையும் இறந்து மூன்று வாரங்களுக்கு மேல் இருக்கும் என்றும், அதனால் அவர்களுடைய உடல் மிகவும் சிதிலமடைந்து இருப்பதாகவும், டி.என்.ஏ சோதனை மூலம் அவர்களை அடையாளம் காண இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர். அந்த வீட்டில் கார்பன் மோனாக்சைடு வாயு பரவியிருந்ததாகவும், அதை அவர்கள் சுவாசித்ததால் மரணம் அடைந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆசிரியர்