மீனவப்பெண்ணிடம் பிடிபட்ட $2.02 மில்லியன் மதிப்பு உடைய உலகின் மிகப்பெரிய மீன். மீனவப்பெண்ணிடம் பிடிபட்ட $2.02 மில்லியன் மதிப்பு உடைய உலகின் மிகப்பெரிய மீன்.

உலகிலேயே மிகப்பெரிய மீன் ஒன்றை பிடித்து சாதனை புரிந்திருக்கிறார் நியூசிலாந்து நாட்டு மீனவப்பெண் ஒருவர். ஆனாலும் அந்த மீனை அவரால் விற்க முடியவில்லை என்பதுதான் சோகம்.

நியூசிலாந்து நாட்டை சேர்ந்த Donna Pascoe, என்ற 56 வயது மீனவப்பெண் ஒருவர் நேற்று முன் தினம் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, மிகப்பெரிய மீன் ஒன்று அவரிடம் மாட்டியுள்ளது. 411.6 கிலோ எடையுள்ள அந்த மிகப்பெரிய மீன் வரயெ என்ற வகையை சேர்ந்தது. நான்கு மணி நேரம் போராடி அவர் அவருடைய குழுவினர்களின் உதவியுடன் அந்த மீனை பிடித்து உலக சாதனை புரிந்திருக்கிறார் Donna Pascoe,. இந்த மீனின் எடை இரண்டு குட்டி யானைகளின் எடைகளுக்கு சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மீனை அவர் விற்பனை செய்தால் அவருக்கு $2.02 மில்லியன் பணம் கிடைக்கும். ஆனால் அவரால் அந்த மீனை விற்கமுடியாது. ஏனெனில் இவ்வளவு பெரிய மீனை விற்பனை செய்ய அவருக்கு International Game Fish  என்ற அமைப்பிடம் அனுமதி பெற வேண்டுமாம். அந்த அமைப்பிடம் அனுமதி கேட்டு அவர் விண்ணப்பித்து இருக்கிறார். கூடிய விரைவில் அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுவரை அவர் அந்த மீனை பதப்படுத்தி தன் வீட்டிலேயே வைத்து பாதுகாக்க முடிவு செய்திருக்கிறார்.

உலகிலேயே மீனவர்களிடம் பிடிபட்ட மீன்களில் இதுதான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

9745545

1618630_696497207067508_1102938434_n

ஆசிரியர்