இங்கிலாந்து பொறியாளர்கள், வெள்ளத்தால் சேதமடைந்த ரயில்வே லைனை இரு மாதங்களில் சரிசெய்துள்ளனர்.இங்கிலாந்து பொறியாளர்கள், வெள்ளத்தால் சேதமடைந்த ரயில்வே லைனை இரு மாதங்களில் சரிசெய்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் கடல் அரிப்பில் சேதமடைந்த ஒரு ரயில்வே லைனை இரண்டே மாதத்தில் சரி செய்து பிரிட்டன் பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் கடலோர பகுதியான Dawlish in Devon என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர புயல் மழை காரணமாக கடலோர பகுதியில் உள்ள ரயில்வே லைன் பயங்கரமாக சேதம் அடைந்தது. இங்கிலாந்து பொறியாளர்கள் அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு இரண்டே மாதங்களில் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர். நேற்று முதல் மீண்டும் ரயில் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. பிரதமர் டேவிட் கேமரூன் ரயில் போக்குவரத்தை திறந்து வைத்து, இதில் பணிபுரிந்த பொறியாளர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

இங்கிலாந்து பொறியாளர்கள் 200 வருடங்கள் தாக்கு பிடிக்கக்கூடிய வலுவான காங்கிரட் அடித்தளம் அமைத்து அதன் மீது ரயில்வே லைனை பொருத்தியிருக்கிறார்கள். இந்த புதிய ரயில்வே லைனை சரிசெய்ய இங்கிலாந்து அரசு $58 மில்லியன் செலவு செய்துள்ளது.

2010_12130038_scale_pc

1052696

ஆசிரியர்