இராக்கில் தொடர் குண்டுவெடிப்பு | 24 பேர் பலிஇராக்கில் தொடர் குண்டுவெடிப்பு | 24 பேர் பலி

இராக்கில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் கார்குண்டு தாக்குதல்களில் 24 பேர் பலியாகினர். நுமானியாவில் 2 கார்களில் வெடிகுண்டுகளை நிரப்பி, பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் அப்பாவி மக்கள் 5 பேர் பலியாகினர்.

இதேபோல் பாக்தாத்தின் மத்திய பகுதி, காஜிமியா, ஷாப், ஷாமையா, கர்ரடா உள்ளிட்ட மற்ற இடங்களில் நிகழ்ந்த கார்குண்டு தாக்குதல்களில் மேலும் 19 பேர் உயிரிழந்தனர்.  இந்தத் தாக்குதல்களுக்கு அல் கொய்தா பயங்கரவாதிகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆசிரியர்