Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்

நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்நரேந்திர மோடி இன்று சென்னை வருகை: ரஜினியைச் சந்திக்கிறார்

1 minutes read

rajini_modi

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக அக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) சென்னை வருகிறார்.

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள ஏ.எம். ஜெயின் கல்லூரி மைதானத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

மீனம்பாக்கம் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு அன்று இரவே குஜராத் செல்கிறார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்தை நரேந்திர மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இத்தகவலை பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் சென்னையில் சனிக்கிழமை தெரிவித்தார்.

மீண்டும் பிரசாரம்: இதைத் தொடர்ந்து மோடி, ஏப்ரல் 16, 17 தேதிகளில் மீண்டும் தமிழகத்துக்கு பிரசாரத்துக்காக வருகிறார்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட பர்கூரில் 16-ஆம் தேதி கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேசுகிறார்.

பர்கூரைத் தொடர்ந்து சேலம், ஈரோடு, கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டங்களிலும் அவர் பேசுகிறார். இத்தகவலை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கிருஷ்ணகிரியில் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More