இந்த நாட்டில் நிரந்தரமான ஒரு சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேச வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நிச்சயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கம் பேசினால் மாத்திரமே ஜனாதிபதி கூறுகின்ற சாந்தி சமாதானமாக இருக்கலாம்,அல்லது வேறுயாரும் கூறுகின்ற சாந்தி சமாதானம் இந்த நாட்டிற்கு வரும் என்கின்ற செய்தியை கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஏனென்றால் தொடர்ச்சியாக இன்னல்பட்டு அடிமைப்பட்டுக்கொண்டிருக்கின்ற இனம் நாங்கள். எங்களுக்கு விமோசனம் தேவை. தற்போதைய சந்ததியில் பாரம்பரிய பண்பாட்டு விழுமியங்களை தமிழர் மரபில் இருந்து அழியாமல் பாதுகாக்க சித்திரைப்புதுவருடமும் வழிவகுக்கின்றது என மேலும் தெரிவித்தார்.