லண்டனில் விஜய் ஸ்டார் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்துக்கொள்வதற்கு விஜய் டிவி நிர்வாகம் இணக்கம்லண்டனில் விஜய் ஸ்டார் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்துக்கொள்வதற்கு விஜய் டிவி நிர்வாகம் இணக்கம்

 

எதிர்வரும் 20ம் திகதி லண்டனில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டுமென ஐரோப்பிய தமிழ்க் கலைஞர்கள் சங்கம் (ETAA) வேண்டுக்கோள் விடுத்திருந்தது. மேற்படி ETAA அமைப்பின் வேண்டுகோளை விஜய் டிவி நிறுவனம் ஏற்றுக்கொண்டது என இவ் அமைப்பின் ஊடகச் செய்தி தெரிவிக்கின்றது.

 

 

ஊடக அறிக்கை – ETAA

ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களும் பங்குபற்றும் விஜய் ஸ்டார் நைட்

தென்னிந்தியக் கலைஞர்களுடன் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களும் பங்குபற்றும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சி லண்டன் O2 Arena மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றது.

எதிர்வரும் 20ம் திகதி லண்டனில் மிகப் பிரமாண்டமாக நடைபெறவிருக்கும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களும் இணையவுள்ளனர் என்பதனைஅனைவருக்கும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

ஐரோப்பிய தமிழ்க் கலைஞர்கள் சங்கத்தின்(ETAA) வேண்டுக்கோளுக்கிணங்க விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினர் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களுக்காக இவ் வாய்ப்பினை வழங்கவுள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட ஐரோப்பிய தமிழ்க் கலைஞர்கள் சங்கம்(European Tamil Artists Association) ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதில் பெரும் பங்காற்றி வருகின்றது.

இந்நிலையில், லண்டனில் நடைபெறவிருக்கும் விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்துக்கொள்வதற்கு விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்திடம் ஐரோப்பிய தமிழ்க் கலைஞர்கள் சங்கம்(ETAA) வேண்டுகோளை விடுத்ததையடுத்து ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களையும் இணைத்து அவர்களுக்கான வாய்ப்பினை வழங்குவதற்கு இணங்கியுள்ளனர்.

இனிவரும் காலங்களிலும் ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இவ்வாறான மாபெரும் பிரமாண்டமான மேடைகளை உருவாக்கி கொடுப்பதில் ETAA என்றும் முன்நிற்கும்.

மேலும் விஜய் தொலைக்காட்சி நிர்வாகத்தினருக்கு ETTA ஐரோப்பிய தமிழ்க்கலைஞர்களின் சார்பில் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

ETAA

ஆசிரியர்