தென் கொரியாவில் கப்பல் மூழ்கியது | 107 பேரைக் காணவில்லைதென் கொரியாவில் கப்பல் மூழ்கியது | 107 பேரைக் காணவில்லை

தென் கொரியாவில் 477 பயணிகளுடன் சென்ற கப்பல் ஒன்று மூழ்கி விபத்துக்குள்ளானதில் 2 பேரது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 107 பேரைக் காணவில்லை.

கப்பல் ஒரு பக்கமாக சாய்வதாக கப்பற்படைக்கு தகவல் வந்ததும், ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலமாக விரைந்து சென்ற மீட்புக் குபவினர் 368 பயணிகளை பத்திரமாக மீட்டனர். 2 உடல்களைக் கைப்பற்றினர். மீதம் 107 பேரின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. இந்த கப்பலில் சுமார் 338 மாணவர்களும், அவர்களது ஆசிரியர்களும் சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கப்பல் மூழ்குவதற்குள் கப்பலில் இருந்த அனைவரும் குதித்து விட்டதாக கப்பலில் பயணம் செய்தவர்கள் கூறுகின்றனர். எனினும், மூழ்கிய கப்பலுக்குள் யாரேனும் சிக்கியிருக்கிறார்களா என்று தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஆசிரியர்