சிதம்பரம் தான் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்தார் | மோடி பதிலடி சிதம்பரம் தான் இந்திய பொருளாதாரத்தை என்கவுண்டர் செய்தார் | மோடி பதிலடி

eer

மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கும், பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்து வரும் சொற் போர் இன்றும் தொடர்ந்துள்ளது.

ரீ கவுண்டிங் அமைச்சர் என்று மோடி, சிதம்பரத்தைக் குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், என்கவுண்டர் முதல்வர் என்று சிதம்பரம் மோடியை வர்ணித்தார்.

தன்னை என்கவுண்டர் முதல்வர் என்று கூறிய சிதம்பரம் தான், இந்திய பொருளாதாரத்தையே என்கவுண்டர் செய்துவிட்டார் என்று மோடி, இன்று சிதம்பரத்தின் பெயரை குறிப்பிடாமல் பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், இந்திய பொருளாதாரத்தையே என்கவுண்டர் செய்த அமைச்சருக்கு, இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பதில் நம்பிக்கை இல்லை. அதனால்தான் தேர்தலில் போட்டியிடாமல் விலகி ஓடிவிட்டார்.

இந்த முறை மறு வாக்கு எண்ணிக்கை நடத்தினாலும் கூட அவர் வெற்றி பெற முடியாது என்பது நன்றாக தெரிந்து விட்டது என்று மோடி பேசியுள்ளார்.

ஆசிரியர்