லண்டனில் ஸ்டார் விஜய் நைட் மாபெரும் நிகழ்ச்சியில் தெனிந்திய தமிழ் கலைஞர்கள்லண்டனில் ஸ்டார் விஜய் நைட் மாபெரும் நிகழ்ச்சியில் தெனிந்திய தமிழ் கலைஞர்கள்

re

விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் மற்றும் நடிகர் விக்ரம் கலந்துகொண்டு சிறப்பிக்கும் ஸ்டார் விஜய் நைட் நிகழ்ச்சி லண்டனில் நடைபெறவிருக்கின்றது.

எதிர்வரும் 20ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை லண்டன் O2 Arena மாபெரும் பிரமாண்டமான மேடையில் சீயான் விக்ரம் மற்றும் விஜய் தொலைக்காட்சி பிரபல நட்சத்திரங்கள், சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் மற்றும் ஈழத்துக் கலைஞர்களும் கலந்து சிறப்பிக்கும் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்றது.

மேலும் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி டீடீ மற்றும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் மக்களுடனான சந்திப்பு ஒன்றினையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்படுத்தியுள்ளனர். Eastham Nalas அப்பக்கடையில் மதியம் 12:00 மணிமுதல் – 13:00 மணிவரையும், Wembley Moore Spice 1966 Restaurant இல் மாலை 16:00 மணிமுதல் 17:00 மணிவரையும் தொலைக்காட்சி தொகுப்பாளினி டீடீ மற்றும் சூப்பர் சிங்கர் வெற்றியாளர்களையும் சந்தித்து, கலந்துரையாடி, புகைப்படங்களையும் எடுத்துக்கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மேற்படி இடங்களில் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுக்களையும் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

 

ஆசிரியர்