உக்ரைன் பிரச்னைக்கு ஜெனீவாவில் ஒப்பந்தம் | ஒபாமா நம்பிக்கைஉக்ரைன் பிரச்னைக்கு ஜெனீவாவில் ஒப்பந்தம் | ஒபாமா நம்பிக்கை

121204_barack_obama_ap_605

ஜெனீவாவில் நான்கு நாடுகள் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தையில், உக்ரைன் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஒரு வியத்தகு ஒப்பந்தம் ஏற்படும் என்று தாம் நம்புவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றின் ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது. இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் ஒபாமா கூறியதாவது:

உக்ரைன் விவகாரம் குறித்து எத்தகைய உறுதிமொழியையும் நாங்கள் கொடுக்க முடியாது என்று நான் நினைக்கவில்லை.

அங்கு நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு ராஜீயரீதியில் தீர்வு காண சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே கருதுகிறேன்.

அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது எங்களது குறிக்கோள் என்று ஒபாமா கூறினார்.

ஆசிரியர்