475 பயணிகளுடன் மூழ்கிய தென் கொரிய கப்பலின் கப்டன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவர்கள் உட்பட 475 பயணிகளுடன் பயணித்த குறித்த கப்பல் கடந்த 16 ஆம் திகதி கடலில் முழ்கியது.
இதன் போது 28 பேர் உயிரிழந்துள்ளதோடு 270 பேர்காணாமல் போயுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கப்டன் லீன் ஜூன் (68 வயது) சம்பவம் நடந்த நேரத்தில் கப்டன் தலைமையில் கப்பல் இயக்கப்பட்டிருக்கவில்லை, மாறாக இளநிலை அதிகாரி ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் கப்பல் இயக்கப்படடிருந்தமை தெரிய வந்துள்ளது.
இதனிடையே, மூழ்கிய இந்தக் கப்பலில் இருந்து உயிரோடு காப்பாற்றப்பட்டிருந்த பாடசாலை துணைத் தலைமை ஆசிரியர் நேற்று மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.