இங்கிலாந்தில் வேலை செய்ய வெளிநாட்டு டாக்டர்களுக்கு அனுமதியை கடுமையாக்க பரிசீலனைஇங்கிலாந்தில் வேலை செய்ய வெளிநாட்டு டாக்டர்களுக்கு அனுமதியை கடுமையாக்க பரிசீலனை

40021

இங்கிலாந்தில் தேசிய சுகாதார துறையில்(NHS)  பணிபுரிய விரும்பும் டாக்டர்களுக்கு தேர்வுகளை கடுமையாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா, இலங்கை உள்பட ஆசிய நாடுகளை சேர்ந்த டாக்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.இங்கிலாந்தில் அரசு சுகாதார துறையில் பணிபுரியும் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர்களுக்கு போதிய திறமை இல்லை என்று உள்நாட்டு டாக்டர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இங்கிலாந்தின் அரசு சுகாதார பிரிவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர்களுக்கு கடும் நுழைவு தேர்வுகளை வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தேர்வில் வெற்றி பெறும் மதிப்பெண்ணின் அளவை 63 சதவீதத்தில் இருந்து 76 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் சுமார் 95 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதில் பெரும்பான்மையோர் இந்தியர்கள். இதில் இங்கிலாந்தில் பணிபுரிய வேண்டும் என்றால் ஐஇஎல்டிஎஸ் மற்றும் ஜிஎம்சி என்ற இரண்டு தேர்வுகளை முடித்திருக்க வேண்டும். அவ்வாறு முடித்தவர்களுக்கே இங்கிலாந்தில் டாக்டராக பணிபுரிய வாய்ப்பு வழங்கப்படுகிறது.தற்போது வெளிநாட்டில் பயிற்சி பெற்ற டாக்டர்களுக்கு இந்த 2 தேர்விலும் வெற்றி பெறும் மதிப்பெண்ணின் அளவை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

ஆசிரியர்