6மாத கர்ப்பிணியான ஊடகவியலாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த உத்தரவிட்ட அரசியல்வாதி6மாத கர்ப்பிணியான ஊடகவியலாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த உத்தரவிட்ட அரசியல்வாதி

தனக்கு பிடிக்காத முறையில் கேள்வி கேட்ட 6மாத கர்ப்பிணியான பெண் ஊடகவியலாளரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த தனது உதவியாளர்களுக்கு ரஷ்ய ஆதரவு அரசியல் தலைவர் ஒருவர் உத்தரவிட்டதையடுத்து அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விபரீத சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

அன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது தேசியவாதியான விளாடிமிர்  ஸிரினோவ்ஸ்கி என்ற மேற்படி அரசியல் தலைவரிடம் உக்ரேனுக்கு எதிரான தடைகள் குறித்து ஊடகவியலாளரான ஸ்டெல்லா டுபோவிட்ஸ்கயா வினவியதையடுத்து கடும் சினமடைந்த ஸிரினோவ்ஸ்கி ஸ்டெல்லாவை நோக்கி கூச்சலிட்டவாறு மேற்படி விபரீத உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஸ்ரெல்லாவை முத்தமிட்டு பிடித்திழுத்து மோசமாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்துமாறு ஸிரினோவ்ஸ்கி தனது இரு ஆண் உதவியாளர்களுக்கு உத்தரவிட்டதும், அவர்களில் ஒருவர் ஸ்ரெல்லாவை நெருங்கி வரவும் அங்கிருந்த ஏனைய ஊடகவியலாளர்கள் அவரை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான ஸ்ரெல்லா ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஸ்ரெல்லா பணியாற்றும் ஊடக நிறுவனமான ரஷ்யா ருடே ஸிரினோவ்ஸ்கிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது.
விளாடிமிர் ஸிரினோவ்ஸ்கியின் முறையற்ற செயலால் எமது நிருபர் மருத்துவமனையில் இருக்கிறார். அதனால் ஸிரினோவ்ஸ்க்கிக்கு எதிரான சாத்தியமான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்து அவரை கடுமையாக தண்டிக்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்யா ருடேயின் பணிப்பாளர் நாயகம் மார்க்க ரெதா சிமோனியன் தெரிவித்தார்.

ஆசிரியர்