கடந்த சில மாதங்களில் மட்டும் பேஸ்புக் தொடர்பாக 500 ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணனி அவசர துலங்கல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மேற்படி முறைப் பாடுகளில் 80 சதவீதமானவை போலி பேஸ்புக் கணக்குகள் என கணனி அவசர துலங்கல் அமைப்பின் பேச்சாளர் ரொசான் சந்திர குப்த தெரிவித்தார்.
இது தவிர சட்ட விரோதமாக சில கணக்குகளுக்குள் பிரவேசித்தல், இக்கணக்குகள் ஊடாக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற பல முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே போலி கணக்குகள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரித்து ஒரு வார காலத்தில் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப் படுவதாக இலங்கை கணனி அவசர துலங்கல் அமைப்பு தெரிவித்துள்ளது.