மோடி புது தெம்புடன் கூட்டங்களில் மோடி புது தெம்புடன் கூட்டங்களில்

24ss1

மத்தியில், பா.ஜ., தலைமையில் அமைய உள்ள அரசுக்கு, மம்தா, மாயாவதி, ஜெயலலிதா போன்ற தலைவர்களின் ஆதரவு தேவைப்படாது; எங்கள் கூட்டணி கட்சிகள், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்,” என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி கூறினார். இதன் மூலம், தேர்தலுக்குப் பிறகு, பிற கட்சிகளின் ஆதரவை, பா.ஜ., பெற தேவைஇருக்காது என்பதை அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

 
லோக்சபா தேர்தல் பிரசாரத்திற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல், தீவிர பிரசாரம் செய்து வரும் மோடியின் சமீபகால பேச்சு மற்றும் பேட்டிகள், ‘அடுத்த பிரதமர் மோடி தான்’ என்பதை உறுதிபடுத்தும் விதத்தில் உள்ளன.’நடந்து முடிந்த ஆறு கட்ட தேர்தல்களில், பா.ஜ., கூட்டணி கட்சிகள், அமோக வெற்றி பெறும்’ என, வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்து போன்றவற்றால், உற்சாகம் அடைந்துள்ள மோடி, புது தெம்புடன் கூட்டங்களில் உரை ஆற்றி வருகிறார்.

ஆசிரியர்