பிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை அருகே செயற்கைக்கோள் பாகம் பிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை அருகே செயற்கைக்கோள் பாகம்

fisher

பிரேசிலின் அமேசான் ஆற்றங்கரை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த மேனுவேல் என்ற மீனவர் ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற போது தண்ணீரில் காரை விட மிகப்பெரிய பொருள் ஒன்று மிதப்பதை பார்த்து, கிராம மக்களை அழைத்து வந்த அதனை கரையேற்றினார்.

அப்போதுதான் தெரிந்தது, அது கடந்த ஜூலை மாதம் ஐரோப்பா விண்ணில் செலுத்திய செயற்கைக் கோள் உந்து வாகனத்தின் உடைந்த பாகம் என்பது.

இங்கிலாந்து – ஐரோப்பிய கூட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ’அல்பாசாட்’ செயற்கைக்கோளை சுமந்து சென்ற உந்து வாகனத்தின் ஒரு பகுதிதான் அது என்பதை ஐரோப்பிய அதிகாரிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

பிரேசில் அருகே இருக்கும் பிரெஞ்சு கயானா பகுதியில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோளின் உந்து வாகனம் அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் சிதைக்கப்பட்டது. அந்த அலைகளின் வேகத்தினால் ஆற்றுக்குள் அடித்துக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆசிரியர்