இலங்கையில் வடக்கு நோக்கி சென்ற யாழ்தேவி பாரிய விபத்து | 75 பேர் காயம் 5 பேர் கவலைக்கிடம் இலங்கையில் வடக்கு நோக்கி சென்ற யாழ்தேவி பாரிய விபத்து | 75 பேர் காயம் 5 பேர் கவலைக்கிடம்

 

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 45 பேர் வரையில் காயமடைந்த நிலையில் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஐவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக குருநாகல் வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.     குருநாகல் பொத்துஹெர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் காயமடைந்துள்ளதோடு 5 பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்து தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பீ.ஏ.பீ ஆரியரத்ன குறிப்பிட்டார்.   இலங்கையில் இடம்பெற்ற பெரும் பாதிப்புடைய ரயில் விபத்து இது என அவர் கூறினார்.   எவ்வாறாயினும் இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தின் காரணமாக 10 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் பெட்டிகள் இரண்டு மற்றும் ரயில் என்சின்கள் இரண்டு முற்று முழுதாக சேதமடைந்துள்ளன.

train-acci-03

train-acci-02

train-acc-4

train_acident_002

ஆசிரியர்