சீனாவில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு | 3 பேர் பலி, 79 பேர் படுகாயம்சீனாவில் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு | 3 பேர் பலி, 79 பேர் படுகாயம்

சீனாவின் எக்ஸின்ஜாங் மாகாணத்தில் உள்ள உரும்கியூ ரயில்நிலையத்தில் நேற்று நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாயினர் மேலும் 79 பேர்  படுகாயம் அடைந்தனர் குண்டுவெடிப்பு தற்கொலைப்படை தாக்குதல் இல்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எக்ஸின்ஜாங் மாகாணத்தின் தலைநகரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் குண்டுவெடித்தது, அதன்பின் தற்போது  இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. குண்டுவெடிப்பிற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. உரும்கியூ தெற்கு ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் குறித்து சீன அதிபர் எக்ஸி ஜின்பிங் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அந்நாட்டில் இருந்து வெளிவரும்  “மக்கள்  தினசரி செய்திதாள்” என்ற செய்திநிறுவனம் செய்திவெளியிட்டுள்ளது.

ஆசிரியர்