நிலவுக் கிராமம் | 2030ல் நிலவில் மனித கிராமம் அமைக்க ரஷ்யா திட்டம்நிலவுக் கிராமம் | 2030ல் நிலவில் மனித கிராமம் அமைக்க ரஷ்யா திட்டம்

moon (1)

2030ம் ஆண்டில் நிலவில் குடியேறி மனிதர் கிராமம் அமைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது. வரும் 2028ம் ஆண்டு அதற்கான பணியில் ஈடுபட மனிதர்களை அனுப்ப தாயாராகி வருவதாகவும் இறுதிகட்டத்தில் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி அங்கு ஒரு கிராமத்துக்கான உள்கட்டமைப்பு அமைக்க சந்திரனின் மேற்பரப்பிற்கு மனிதர்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் மாஸ்கோ டைம்ஸ் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட பணிகளுக்கு 815.8 மில்லியன் டாலர் செலவாகும். தனியார் முதலீட்டாளர்கள் இந்த திட்டத்திற்கு பெரிதும் உதவுவார்கள் என ரஷ்யா நம்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

நிலவு காலனி நிறுவதன் மூலம் அரிதான மற்றும் மதிப்பு மிக்க தாதுக்கள், மற்றும் எதிர்கால விண்வெளி பணிகான ஏவுதளம் நிறுவுதல் போன்றன சாத்தியமாகும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆசிரியர்