மோடி எனும் புயலால் தூக்கி எறியப்படுகின்றது காங்கிரஸ் ஆட்சி | பாஜக 338 இடங்களில் முன்னிலையில்மோடி எனும் புயலால் தூக்கி எறியப்படுகின்றது காங்கிரஸ் ஆட்சி | பாஜக 338 இடங்களில் முன்னிலையில்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவின் 16-வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது.

அத்துடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலும் நடந்தது.

ஏப்ரல் மாதம் 7-ம் திகதி தொடங்கி கடந்த 12-ம் திகதி வரை அமைதியாக நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 668 பேர் பெண்கள்.

இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீதம் வாக்குப்பதிவுகள் நடந்துள்ளன.

இன்றைய தினம் வெளியாகிவரும் தேர்தல் முடிவுகளின் படி  பாஜக கூட்டணி-338,  காங்கிரஸ் கூட்டணி-59 ,
மற்ற கட்சிகள் 146 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன

ஆட்சி அமைக்க பெரும்பான்மையாக 272 தொகுதிகள் பெற்றிருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 316 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்