சாதனை மனிதனின் முதல் பிரவேசம் | நாடாளுமன்ற படிகளை வணங்கிய மோடிசாதனை மனிதனின் முதல் பிரவேசம் | நாடாளுமன்ற படிகளை வணங்கிய மோடி

xdfgdfg

இன்று காலை பாஜகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தார் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி. அவர் நாடாளுமன்ற வளாகத்துக்குள் வந்ததும், நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மாண்பையும் மதித்துப் போற்றும் வகையில், நாடாளுமன்ற கட்டடத்தின் படிகளில் தனது தலையை வைத்து, கீழே விழுந்து வணங்கினார்.

நாட்டின் உயரிய பொறுப்புக்கு தன்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவரது செய்கை இருந்ததாக உறுப்பினர்கள் பரவசப்பட்டனர்.

மோடி தனது வாழ்க்கையில் குஜராத் முதலமைச்சராகத்தான் சட்டமன்றத்துக்கு முதல் முதலில் தேர்வானார். அதே போல், பாரதப் பிரதமராகத் தேர்வாகி, முதல்முறையாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்