Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்டென்னிஸ் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவுக்கு 6-வது இடம்

1 minutes read

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவை தொடர்ந்து உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

பெண்கள் ஒற்றையர் பிரிவு தர வரிசையில், பிரெஞ்ச் ஓபன் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். சீன வீராங்கனை லீ நா 2-வது இடத்தில் நீடிக்கிறார். இறுதிப்போட்டியில் ஷரபோவாவிடம் தோல்வி கண்டு சாம்பியன் பட்ட வாய்ப்பை இழந்த ருமேனியா வீராங்கனை சிமோனே ஹலேப் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறினார். போலந்து வீராங்கனை அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்கு சரிந்தார். சாம்பியன் பட்டம் வென்ற ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறினார்.

இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற சூய் பெங் (சீனா), சு-வெ-யா (சீனா) ஆகியோர் முறையே பெண்கள் இரட்டையர் பிரிவில் முதலிடம் வகிக்கின்றனர். பிரெஞ்ச் ஓபன் இரட்டையரில் கால் இறுதியில் தோல்வி கண்ட இந்திய வீராங்கனை சானியா மிர்சா 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். இது அவரது சிறந்த தர வரிசையாகும். சானியாவின் ஜோடியான காரா பிளாக் (ஜிம்பாப்வே) 8-வது இடத்துக்கு முன்னேறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More