செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங் அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங்

அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங் அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயார் | அதிபர் ஜீ ஜின்பிங்

1 minutes read

அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவு, ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஏற்படுத்த சீனா தயாராக இருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்தார்.

சீன அரசு சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் போவோ சர்வதேசக் கருத்தரங்கில் சனிக்கிழமை கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

“தூரத்து உறவினர்களைவிட, அண்டை வீட்டார் மேல்’ என்று சீனாவில் ஒரு பழமொழி உண்டு. அண்டை நாடுகளுடன் ஒத்துழைப்பு ஏற்படுத்தும் முயற்சிகளை சீனா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

நட்புறவு, ஒத்துழைப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக அண்டை நாடுகள் அனைத்துடனும் ஒப்பந்தம் ஏற்படுத்த தயாராக உள்ளோம் என்றார்.

சீனப் பொருளாதாரம் குறித்துப் பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

பொருளாதாரத்தில் தாராள மயம், வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஏற்ற சூழல், முதலீட்டாளர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் நலன்களுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றை சீனா உறுதி செய்யும் என்று ஜீ ஜின்பிங் கூறினார்.

சீனா உருவாக்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இந்தியா உள்பட 30 நாடுகள், உறுப்பினர்களாகச் சேர்ந்துள்ளன. ரஷியாவும் இந்த வங்கியில் பங்கு பெறப் போவதாக அறிவித்துள்ளது.

அந்த வங்கியில் உறுப்பு நாடாகச் சேருவதற்கு கடைசி நாளான மார்ச் 31-ஆம் தேதிக்குள் மேலும் பல நாடுகள் அதில் பங்கு பெறுவதாக அறிவிக்கும் என எதிர்பார்ப்பதாக ஜீ ஜின்பிங் மேலும் கூறினார்.

சீனாவின் தென் பகுதியிலுள்ள ஹைனான் தீவில் நடைபெறும் இந்த சர்வதேசக் கருத்தரங்கில், நேபாளம், இலங்கை அதிபர்கள், மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும் சர்வதேச அளவில் முக்கியத் தொழிலதிபர்கள், அதிகாரிகள் கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.

டாடா முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, இக் கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் போவோ நிர்வாகக் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.