செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்

அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன சிகிச்சை பலனின்றி இறந்தார்

1 minutes read

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் இளைய சகோதரர் பிரியந்தா சிறிசேன, மணல் குவாரி தகராறில் அவரது நண்பரால்  கோடரியால் வெட்டப்பட்டார். இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரியந்தா நேற்று கொழும்பில் மரணமடைந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு, தனது நண்பரால் கோடரியால¢ தலையில் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரியந்தா சிகிச்சை  பலனின்றி இறந்தார். இந்த செய்தி, சீனப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் சிறிசேனவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் சிறிசேனவின் இளைய  சகோதரர் பிரியந்தா சிறிசேன. இவர் கொழும்பிலிருந்து 215 கி.மீ. தொலைவில் உள்ள பொலநறுவை மாவட்டத்தில் உள்ள எலவீர கிராமத்தில்  குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இவர் மணல் குவாரி நடத்தி வந்தார். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு பாலமுகா நகரில் இருக்கும் அவரின் நண்பர் லக்மலைச் சந்திக்க  பிரியந்தா சென்றார். அந்த சந்திப்பின்போது, இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த லக்மல்,  கோடரியால் பிரியந்தாவின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த பிரியந்தா பொலநறுவையில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்கப்பட்டார். ஆனால், தலையில் ஏற்பட்ட காயத்தால் அவரின் உடல்ந¤லை மிகவும் மோசமடைந்தது. இதையடுத்து அவரை  கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல், நேற்று காலை பிரியந்தா இறந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலநறுவை போலீஸார்  லக்மலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். லக்மலை அடுத்த மாதம் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.