கூட்டுப் படைகளின் வான்வழித் தாக்குதல்களால் பதற்றம் ஏற்பட்டுள்ள யேமன் நாட்டில் சிக்கித் தவித்து வந்த 502 பாகிஸ்தானியர்கள் விமானம் மூலம் திங்கள்கிழமை தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
யேமனில் சிக்கியுள்ள 3,000 பாகிஸ்தானியர்களை அங்கிருந்து பத்திரமாக வெளியேற்ற பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, யேமன் தலைநகர் சனாவிலிருந்து அந்த நாட்டின் ஹுதைதா நகருக்கு சாலை வழியாக அழைத்துவரப்பட்ட 502 பாகிஸ்தானியர்கள், பாகிஸ்தான் விமானம் மூலம் திங்கள்கிழமை கராச்சி நகரம் வந்திறங்கினர்.
அவர்களில் 326 பேர் மற்றொரு விமானத்தின் மூலம் தலைநகர் இஸ்லாமாபாத் அழைத்து வரப்பட்டனர்.
யேமனில் சிக்கியுள்ள மற்ற பாகிஸ்தானியர்களையும் தாயகம் அழைத்து வரும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக அதிகாரிகள் கூறினர்.