செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அதிபர் சிறிசேனா உத்தரவு | “இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்”அதிபர் சிறிசேனா உத்தரவு | “இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்”

அதிபர் சிறிசேனா உத்தரவு | “இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்”அதிபர் சிறிசேனா உத்தரவு | “இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைது செய்யுங்கள்”

1 minutes read

இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அனைத்து இந்திய மீனவர்களையும் கைது செய்யுங்கள் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடமாகாண மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கிடையே நேற்று கொழும்புவில் கலந்து ஆலேசித்த அதிபர் சிறிசேனா, கடற்படையினருக்கு இந்த புதிய உத்தரவை பிறப்பித்திருக்கின்றார்.

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கி மாலை 4.00 மணி வரையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. நேற்றைய சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்மந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன், மாகாண கடல் தொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அதே சமயம் மீனவர்கள் சார்பில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கின்றனர். இச்சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;

நேற்றைய சந்திப்பில் 3 முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு எழுத்து மூலம் மகஜர் ஒன்றினை கையளிப்பது, இரண்டாவதாக தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டும் விஷயங்களை இந்திய மத்திய அரசுக்கும் சுட்டிக்காட்டுவது, 3 ஆவதாக இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை உடனடியாக கைது செய்வது என்ற 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரேமச்சந்திரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.