செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது

போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது போதைமருந்துடன் மலேசிய இளம்பெண் நேபாளத்தில் கைது

1 minutes read

மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டார். 5 லேப்டாப் பைகளில் இவர் வைத்திருந்த 11 கிலோ கொக்கைனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காவல்துறையினர் இவரிடம் விசாரணை மேற்கொண்டபோது கிடைத்த விபரங்கள் பின்வருமாறு:-

நேபாளத்தின் கோஹா வழியாக ரோமுக்கு செல்வதற்காக திரிபுவன் விமான நிலையத்திற்கு வந்திருந்த போது, போலீசாரால் கைது செய்யப்ட்ட மார்டினா, பிரேசிலில் இருந்து அந்த போதை மருந்தை வாங்கியுள்ளார், மலேசியா மற்றும் புதுடெல்லியிலிருந்து பல முறை போதை மருந்தைக் கடத்தியுள்ள இவர், முதல் முறையாக நேபாளம் வழியாக வந்த போது போலீசில் பிடிபட்டுள்ளார்.

போதை மருந்து கடத்துவதற்காக பிரேசிலில் 1000 அமெரிக்க டாலர்கள் வாங்கிக் கொண்டு, அவர்கள் சொல்லும் இடத்தில் போதை மருந்தைக் கொண்டு போய் சேர்த்த பிறகு 5000 டாலர் பெற்றுக் கொள்வதாக இருந்தார்.

தற்போது இவரைக் கைது செய்துள்ள போலீசார், இவரை வைத்து போதை மருந்துகளைக் கடத்தும் சர்வதேச போதை மருந்து கும்பலைப் பிடிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.