செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்இங்கிலாந்து இளவரசர் ஹாரி ஆஸ்திரேலிய ராணுவத்தில்

1 minutes read

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆஸ்திரேலிய ராணுவத்தில், நான்கு வார பயிற்சியில் சேர்ந்து உள்ளார்.

இங்கிலாந்து அரச பரம்பரையில், 10 ஆண்டுகள், ராணுவ பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி, இங்கிலாந்து ராணுவத்தில் இணைந்த ஹாரி, ஆப்கான் போரிலும் பங்கேற்றார். இறுதியாக அவர், ஆஸ்திரேலிய ராணுவ பயிற்சியை மேற்கொள்கிறார். இதற்காக, சிட்னி விமான நிலையத்தில் ராணுவ உடையுடன் வந்திறங்கிய ஹாரிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அவர் அங்கிருந்து, 300 கி.மீ., தொலைவில் உள்ள, தலைநகர் கான்பெரா சென்றார். அங்கு, விமானப் படை வீரர் உடையில் வந்த ஹாரி, முதல் உலகப் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் கல்லறையில் மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, ஆஸ்திரேலிய ராணுவ அதிகாரிகள் கல்லூரிக்கு சென்ற ஹாரி, அங்கு, விமான படை தளபதி மார்க் பின்ஸ்கின்னை சந்தித்து, ராணுவ பயிற்சியில் சேர்வதற்காக, தன் பாட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் கொடுத்தனுப்பிய கடிதத்தை வழங்கினார். அக்கடிதத்தில், ‘முதல் உலகப் போரின் நூற்றாண்டில், அதில் பங்கேற்ற இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், ஹாரியின் வருகை பொருத்தமாக அமைந்துள்ளது’ என, ராணி தெரிவித்துள்ளார். இதையடுத்து, வெளியில் கூடியிருந்த கூட்டத்தினருடன் சகஜமாக சிரித்து உரையாடிய ஹாரியுடன் சிலர், ‘செல்பி’ எடுத்துக் கொள்ள விரும்பினர். அதை லாவகமாக தவிர்த்த ஹாரி, ”செல்பி மோகம் மோசமானது,” என்று கூறி விட்டு நகர்ந்தார். ஹாரி, வரும் ஜூன் மாத இறுதியில், இங்கிலாந்து ராணுவத்தில் இருந்து வெளியேறுகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.